வியாழன், 9 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Updated : வியாழன், 25 செப்டம்பர் 2025 (09:46 IST)

தங்கம் வாங்க சரியான நேரம்!? அதிரடியாக விலை குறைந்த தங்கம்! சவரனுக்கு ரூ.720 குறைவு!

Gold price rise

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வேகமாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கிடுகிடு சரிவை சந்தித்துள்ளது.

 

சர்வதேச அளவிலான தங்கம் மீதான முதலீடு மற்றும் பொருளாதார காரணங்களால் நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 19ம் தேதி முதல் தொடர்ந்து உயரத் தொடங்கிய 22 காரட் ஆபரண தங்கம் ஒரு வாரத்திற்குள் ரூ.10,220ல் இருந்து 23ம் தேதியன்று ரூ.10,600 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. 

 

இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நேற்று சற்று ஆறுதலாக கிராமுக்கு ரூ.40 விலை குறைந்த தங்கம், இன்று மேலும் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.10,510க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ரூ.84,800க்கு விற்பனையாகி வந்த ஒரு சவரன் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.720 விலை குறைந்து ரூ.84,080க்கு விற்பனையாகி வருகிறது.

 

தங்கம் விலை கடந்த நாட்களில் (சவரன்)

இன்று - ரூ.84,080

செப்டம்பர் 24 - ரூ.84,800

செப்டம்பர் 23 - ரூ.85,120

செப்டம்பர் 22 - ரூ.83,440

 

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.150 என்ற நிலையிலேயே தொடர்ந்து வருகிறது.

 

Edit by Prasanth.K