1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 மே 2025 (08:55 IST)

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

Air Conditioner

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க மத்திய, மாநில அரசுகள் ஏசி இலவசமாக தருவதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதிய வேளைகளில் பல வீடுகளில் மக்கள் உள்ளே இருந்தாலுமே புழுக்கத்தில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

 

இந்நிலையில் கோடை வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக ஏசி வழங்குவதாகவௌம், அதனை மாநில அரசின் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு தகவல் குறுஞ்செய்தியாக ஆங்காங்கே பரவி வருகிறது.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.