வெள்ளி, 10 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2025 (16:26 IST)

இது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று பேசிய ஈபிஎஸ்.. மறுப்பு தெரிவித்த தவெக..!

Vijay
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
 
பிரச்சாரத்தின்போது பேசிய ஈபிஎஸ், தவெக கொடிகளை சுட்டிக்காட்டி, "இது பிள்ளையார் சுழி போட்டதற்கு அடையாளம், இது புரட்சியின் ஒலி. இந்த ஒலி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் காதுகளை செவிடாக்கும் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். 
 
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே பலம் பெறும் என்றும், ஸ்டாலின் கூட்டணிகளை மட்டுமே நம்பியிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். 
 
இதற்குப் பதிலளித்த த.வெ.க. தலைமை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்த தகவலை மறுத்ததுடன், ஈபிஎஸ் கூட்டத்தில் கொடி அசைத்தவர்கள் தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல, அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
 
கடந்த காலங்களில், த.வெ.க. அனைத்து கூட்டணி வதந்திகளையும் மறுத்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தனித்துத் தயாராகி வருவதாக உறுதியாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran