திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (15:40 IST)

திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் சித்திரவதை செய்தார்கள்.! கையில் சூடு வைத்தார்கள்..! பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் மல்க பேட்டி.!!

child compliant
திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் ஆகிய இருவரும் என்னை அடித்து சித்திரவதை செய்தார்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
 
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி,  பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக மாதம் 16ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 17 வயதிலயே வேலைக்கு சேர்ந்ததாக தெரிவித்தார்.
 
வேலைக்கு சேர்ந்து இரண்டாவது நாளிலயே என்னை அடிக்க தொடங்கியதாகவும், மூன்று வேலையும் சமைத்து தர வேண்டும் என கூறி பல்வேறு பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கி கையில் சூடுவைத்து மிளகாய்பொடியை கரைத்து முகத்தில் ஊற்றி கொடுமைப்படுத்தியதாகவும் சிறுமி வேதனையுடன் கூறினார்.
 
நீயும் நானும் ஒன்னா என சாதிய ரீதியாக கேட்டு ரேசன் அரிசியை சமைக்க வைத்து தனி சாப்பாடு மட்டும் சாப்பிடவைத்து கொடுமைபடுத்தியதாகவும், தன்னை வீட்டிற்குள் பூட்டி வைத்து செல்போனை பறித்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
எம்எல்ஏவின் மருமகளும், மகனும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி எதையும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். கையில் சூடுவைத்த காயம் தெரியக்கூடாது என்பதற்காக கையில் மருதாணி போட்டு மறைத்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.

dmk son
 
தொடர்ந்து செய்திகளிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், சமூக நீதி, பெண்கள் நலம் பேசும் திமுகவினர், பெண் குழந்தையை வீட்டில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையினருக்கு FIR பதிவு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர் என்றும் வன்முறையை செய்துவிட்டு வாகனங்களில் வந்து ஊர்காரர்களை மிரட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
 
மாணவியின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் மாதம் தோறும் 15 ஆயிரம் சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறுமியை கொடுமைபடுத்திய திமுக எம்எல்ஏ மகன், மருமகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எவிடென்ஸ் கதிர் கூறினார்.
 
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் வாய் திறக்காமல் இருக்கிறார், ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார். 3 ஆண்டுகளில் எடுத்த அனைத்து வன்கொடுமை வழக்குகள் மீதும் சந்தேகம் எழுகிறது. சிறுமிக்கு இவ்வளவு பெரிய சித்திரவதை நடைபெற்றுள்ளது என்றும் இங்கு என்ன அமைதி பூங்காவாக இருக்கிறது என்றும் எவிடென்ஸ் கதிர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.