திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (07:47 IST)

இப்படி ஒரு செய்தி வெளியிட்டு நீங்கள் பரவசம் அடைந்தால் எனக்கு ஆனந்தமே: செந்தில் குமார் எம்பி

தர்மபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட தற்போதைய எம் பி செந்தில்குமாருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் அது குறித்த செய்தி முன்னணி நாளிதழில் வெளியான நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியிட்டு நீங்கள் பரவசம் அடைந்தால் எனக்கு ஆனந்தமே என்று செந்தில்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

 திமுக எம்பி செந்தில்குமார் தற்போது தர்மபுரி தொகுதியின் எம் பி ஆக இருக்கும் நிலையில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் பாராளுமன்றத்தில் வட இந்தியாவை பசு மூத்திரம் மாநிலங்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் அதன் பிறகு அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல அவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நிலையில் தான் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னணி நாளிதழ் ஒன்று ’உங்களது வாய்க்கொழுப்பால் தான் உங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்திக்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்த செந்தில்குமார் எம்பி கூறியிருப்பதாவது:

உங்களை, உங்களை போன்றோர்களை இத்தனை நாட்கள் அந்த பயத்துடன் வைத்து இருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அதே போல் சிரிப்பு ஓடம்புக்கு நல்லது தான்

And Btw,
Needn't worry
Because I will have the Last Laugh

Edited by Siva