செவ்வாய், 28 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2025 (08:34 IST)

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டணத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 230 கிலோமீட்டர் தொலைவில் தற்போது மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவு போல் தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து, காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய ஆபத்தைக் குறிக்கும் எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தை குறிக்கும் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், மசூலிப்பட்டினம், நிசான் பட்டினம் துறைமுகங்களில் ஐந்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது
 
 
Edited by Siva