திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (07:42 IST)

கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி..!" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டிஆர்பி ராஜா தனது சமூக வலைத்தளத்தில் தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம், இப்போதுதான் செய்தி பார்த்தேன், கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியின் திமுக பொறுப்பாளர் டி.ஆர்.பி.ராஜா  இந்த கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் வேட்பாளர் இடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva