வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (15:46 IST)

50 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த சின்னசேலம் சாமியார்.. இப்போது சிறையில்..!

50 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த சின்ன சேலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் என்ற பகுதியைச் சேர்ந்த முத்தையன் என்பவர் பில்லி சூனியம் எடுப்பது பெண்களை வசீகரம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கும் முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் டிரைவரின் 50 சென்ட் நிலத்தை வாங்கி 4 லட்சம் பணம் முத்தையன் கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் டிரைவரின் மனைவியுடன் முத்தையனுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் டிரைவருக்கு தெரிய வந்தவுடன் மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தன்னுடைய நிலத்தை திரும்பி கொடு என்று முத்தையனுடன் டிரைவர் கேட்டு உள்ளார்.
 
அப்போது முத்தையன் உன்னுடைய மனைவியுடன் நான் உல்லாசமாக இருந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதை அடுத்து டிரைவர் காவல்துறையில் புகார் செய்தார்.
 
காவல்துறையினர் உடனடியாக முத்தையனை கைது செய்து அவரது வீட்டை சோதனை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முத்தையனின் லேப்டாப்பில் 50 பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்த வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran