பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை: சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்..!
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறைந்த கட்டணம், டிராபிக் பிரச்சனை இல்லாமல் சுலபமான பயணம் ஆகியவை காரணமாக மெட்ரோ ரயில் அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தை விட இது 3.36 லட்சம் பயணிகள் அதிகம் என்றும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அதிக பயணிகள் பயணம் செய்திருப்பதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran