சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் 160 அடி உயரம் கொண்ட ராட்சத ராட்டினத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதால், அதில் ஏறி இருந்த 30-க்கும் மேற்பட்டோர் ராட்டினம் நடுவே மாட்டி, சுமார் 3 மணி நேரமாக வானில் சிக்கி தவித்தனர்.
இவர்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேல் உயரத்தில் சிக்கியவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் போன்ற அடிப்படை உதவிகளை வழங்கும் முயற்சி நடைபெற்றது.
கிரேன் உதவியுடன் அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்தன. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொழுதுபோக்கு பூங்காவின் பாதுகாப்பு முறைமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம், பொழுதுபோக்கு வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
Edited by Siva