திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 23 டிசம்பர் 2023 (19:26 IST)

''கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம்''- உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துரிதமாக உதவி மேற்கொண்டது.

இந்த நிலையில், மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ்கள் பெறலாம் என உயர்கல்வித்துறை இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புயல் பாதிப்பால்  இழந்த சான்றிதழ்களை mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.

அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்களும் தங்கள் விவரங்கள் பதிவிசெய் செய்து  நகல் பெறலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.