1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (12:59 IST)

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

Nainar Nagendran
மாநில அரசின் உரிமைகளை காக்கும் உயர்நிலைக் குழு அமைக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
இன்று சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாகவும், அதன் இடைக்கால அறிக்கை 2026-ல் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலைஇயில்  நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர், “மாநில சுயாட்சியின் மூலம் நாட்டின் வலு குறையும்” என்று குறிப்பிட்டார்.
 
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு  பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran