கல்லூரி மாணவியுடன் உதவி பேராசிரியர் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்.
அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவர், தன்னிடம் படித்த மாணவியுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் பகுதியில் சேர்ந்த மாணவி ஒருவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த போது, அவருக்கும், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் பலமுறை நெருக்கமாக இருந்த நிலையில், அதை உதவி பேராசிரியர் ராஜா வீடியோ எடுத்ததாகவும், தற்போது அந்த வீடியோவை வைத்து மிரட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவி புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் ராஜா காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடந்தது. அதன் போது அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva