விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் மத்திய அரசு பணியை உதறிவிட்டு முக்கிய பிரபலம் ஒருவர் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அதிரடியாக செயல்பட்டு வருகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். ஆரம்பத்தில் புஸ்ஸி என் ஆனந்த் மட்டுமே கட்சிக்கு பெரும் தூணாக விளங்கிய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே கட்சி நிர்வாகிகளாக உள்ளனர். அவர்களை சரியாக வழிநடத்தும் விதமாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் தவெகவுடன் இணைந்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது மத்திய அரசின் ஐஆர்எஸ் பணியில் இருந்த ஒரு பிரபலமும் தவெகவில் இணைகிறார். மத்திய அரசின் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக இருந்து வந்த அருண்ராஜ், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான கருத்துகளை பேசி வந்தார்.
இந்நிலையில் அருண்ராஜ் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய நிதியமைச்சகம் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது. அதை தொடர்ந்து தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து அவர் செயலாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் தவெகவில் இணையும் அவருக்கு இணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவி வழங்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. அவரது வருகை தவெகவிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமையும் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K