செங்கோட்டையனை அடுத்து டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்.. என்ன காரணம்?
நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செங்கோட்டையன் அதிமுகவின் பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “செங்கோட்டையன் எங்களது கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்ந்தவர். ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் அவரை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். எங்களது விருப்பம் செங்கோட்டையனை போல அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்.
அதே நேரத்தில், “அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது. திமுகவின் தூண்டுதல் காரணமாகத்தான் இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் நடக்கின்றன. அனைத்து பின்னணிக்கும் திமுக அரசுதான் காரணம்” என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Edited by Mahendran