திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (19:22 IST)

''நடிகர் விஜய் பாராட்டுக்குரியவர்''- இயக்குநர் கரு. பழனியப்பன்

vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நேற்று  தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
 
அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் அறிவிப்பால் அவரது ரசிகர்களும், மக்கள் இயக்க நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்து நேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
 
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சி பற்றி அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சி மற்றும் அவரது அரசியல் வருகை பற்றி நடிகரும் இயக்குனருமான கரு. பழனியப்பன்  கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘’திரை வெற்றிக்காக அரசியலைப் பயன்படுத்தாமல் திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லும் விஜய் பாராட்டுக்குரியவர். Welcome to the political area josheph vijay களத்தில் சந்திப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய். இவர்  தனது  மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவிகள் செய்து, சினிமா வசனங்கள் மூலம் ரசிகர்களிடன் கைதட்டல்கள் பெற்ற விஜய்யின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும், அவரது கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை பற்றி அறியவும் அரசியல் விமர்சகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்.