தொட்டபெட்டா முனைக்கு செல்ல தடை.. ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!
ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் வறட்சி காணப்படுவதால் யானைகள் உள்பட விலங்குகள் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உலவி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காட்டு யானை நடமாட்டம் அதிகம் உள்ளதால் தொட்டபெட்டா முனைக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொட்டபெட்டா முனைக்கு சென்ற வாகனங்களை சாலையில் வழிமறித்து காட்டு யானைகள் வந்ததாகவும் அதை பார்த்து அச்சமடைந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காட்டு யானை நடமாட்டத்தை ஒட்டி இன்று ஒருநாள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் இருப்பதை அடுத்து நாளை முதல் வழக்கம் போல் செல்லலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது
Edited by Mahendran