வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வரும் நிலையில் இன்று தமிழக மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வரும் நிலையில் கேரளா, தமிழ்நாடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, வலுவடைந்து வருவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று, தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையின் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 35 செ.மீ. மேல்பவானியில் 30 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
Edit by Prasanth.K