வெள்ளி, 10 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2025 (10:15 IST)

ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. விசைப்படகுகளும் பறிமுதல்..!

ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. விசைப்படகுகளும் பறிமுதல்..!
இன்று ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மொத்தம் 47 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மீனவ சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று ஒரே நாளில் 47 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, ஐந்து விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தலைமன்னார் பகுதியில் 30 மீனவர்களும், நெடுந்தீவு அருகே 17 மீனவர்களும் என ஒரே நாளில் மொத்தம் 47 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran