வியாழன், 12 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (12:33 IST)

என்றும் இளமையா இருக்கணுமா? - இதையெல்லாம் சாப்பிட்டா வயசே தெரியாது!

ஆரோக்கிய பழக்கங்கள் என்று கூறும் போது அதில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் முதுமையை தாமதப்படுத்த அல்லது தடுக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


  • முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்டவை சரும செல்கள் சேதமடைவதைத் தடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.
  • கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆரஞ்சு பிக்மென்ட்ஸ் உள்ளன. இவை சருமத்தையும் பளபளப்பாக வைத்து கொள்ள உதவும்.
  • ரெஸ்வெராட்ரோல் எனப்படும் கெமிக்கல் ஏராளமாக நிறைந்துள்ள திராட்சை முதுமையை தடுக்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
  • ஆரஞ்சு பழங்களில் காணப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
  • சருமத்தில் சுருக்கம், டார்க் ஸ்பாட்ஸ், கோடுகள் மற்றும் சரும தளர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை வெங்காயம் போக்கும்.
  • கீரைகள் சருமத்தை புத்துணர்ச்சியாக, இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.
  • தக்காளியில் உள்ள வைட்டமின் டி முதுமையின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.