வியாழன், 12 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 மார்ச் 2023 (08:37 IST)

சிறப்பான சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள்!

Siddagathi
கிராமங்கள், சாலை ஓரங்களில் சர்வ சாதாரணமாக காணப்படும் சித்தகத்தி தாவரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது.

சிறிய இலைகளையும், மஞ்சள் மலர்களையும் கொண்ட சித்தகத்தி தாவரம் சிற்றகத்தி, கருஞ்செம்பை என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
 
  • சித்தகத்தி தாவரத்தின் இலையை அரைத்து கட்டிகளில் கட்டி வந்தால் பழுத்து உடையும். காயமும் குணமாகும்.
  • வாயுக் கட்டிகளை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெய்யில் சித்தகத்தி இலையை அரைத்து கட்ட வேண்டும்.
  • சித்தகத்தி இலையை சாறு பிழிந்து 15 மி.லி அளவு மருந்தாக சாப்பிட்டு வந்தால் கரப்பான், மேகரோகக் கிருமிகள் அழியும்.
  • சித்தகத்தில் இலையுடன், குப்பை மேனி கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்து தடவி குளித்து வந்தால் சொறி, சிரங்கு, படை குணமாகும்.
  • தேங்காய் எண்ணெய்யில் சித்தகத்தி பூக்களை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் ஒற்றை தலைவலி, நோவு நீங்கும்.
  • சித்தகத்தி பூ, கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணியை நல்லெண்ணெயில் காய்ச்சி இளம்சூட்டில் தலைக்கு தேய்த்து குளித்தால் தலை முடி நீளமாக வளரும்.