வெள்ளி, 24 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 அக்டோபர் 2025 (16:11 IST)

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கோரக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் வலியுறுத்தியுள்ளார்.
 
அவர் பேசுகையில், சோப்புகள், உடைகள் போன்ற அன்றாட பொருட்கள்கூட ஹலால் சான்றிதழுக்குள் வருவதாக எச்சரித்தார். அங்கீகாரம் இல்லாத இந்த முறை மூலம் திரட்டப்படும் ரூ.25,000 கோடி பணம், இந்தியாவில் பயங்கரவாதம், லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றங்களுக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
ஏற்கனவே, உ.பி. அரசு 2023 நவம்பரில் ஏற்றுமதி அல்லாத ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு பொருட்களைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆதித்யநாத் தனது உரையில், இந்திய வரலாற்றில் அதிகம் பேசப்படாத "அரசியல் இஸ்லாத்திற்கு" எதிராக நமது முன்னோர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்தும் எச்சரித்தார். அத்துடன், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பை பாராட்டினார்.
 
Edited by Siva