மக்களவை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!!
ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் ஹாட்ரிக் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது.
இவ்வாறு தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.