வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 டிசம்பர் 2025 (08:14 IST)

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பான் மசாலா பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்படாது. மாறாக, இது பான் மசாலா போன்ற பொருட்கள் மீது மட்டுமே விதிக்கப்படும்.
 
இந்த செஸ் மூலம் வரும் வருவாய், சுகாதார திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்த வரி விதிப்பு ஜிஎஸ்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
பான் மசாலா மீது நேரடியாக கலால் வரி விதிக்க முடியாததால், உற்பத்தி நிலையில் வரி விதிக்கவே இந்தத் தனி செஸ் மசோதா கொண்டுவரப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Siva