டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!
பெங்களூருவில் தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் 41 வயது நடிகை ஒருவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து ஆபாச செய்திகளையும் காணொளிகளையும் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய இந்த தொல்லையை, நடிகை பலமுறை பிளாக் செய்தும், அந்த நபர் புதிய கணக்குகளை உருவாக்கி, ஆபாச செய்திகள் மற்றும் மர்ம உறுப்புகளின் காணொளிகளை அனுப்பியுள்ளார். இதையடுத்து நடிகை காவல் துறையில் புகார் அளித்தார்.
விசாரணையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நவீன் கே மோன், ஒரு சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தின் டெலிவரி மேலாளராக பணியாற்றி வந்தவர். அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கன்னட தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran