செவ்வாய், 7 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 செப்டம்பர் 2025 (17:32 IST)

பகலில் டீக்கடை பிசினஸ்.. இரவில் முகமூடி கொள்ளையர்கள்.. 3 பேர் கைது..!

பகலில் டீக்கடை பிசினஸ்.. இரவில் முகமூடி கொள்ளையர்கள்.. 3 பேர் கைது..!
தெலங்கானா மாநிலம் மிரியாலகுடா காவல் துறையினர், ஆந்திர பிரதேசத்தின் ஜக்கையாபேட் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.80 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த செப்டம்பர் 6 அன்று தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூ.80 லட்சம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
 
குற்றவாளிகள் ஜக்கையாபேட்டில் ராஜஸ்தான் டீ ஸ்டால் நடத்தி வந்தது தெரியவந்ததை அடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
டீ ஸ்டால் நடத்தி முகமூடி கொள்ளையர்களாக மாறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran