செவ்வாய், 17 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2025 (08:08 IST)

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட ஒரு தமிழ்நாட்டு இளைஞரின் அனுபவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
டெல்லியில் ராபிடோ ஆட்டோக்களின் கட்டணம் மிகக்குறைவு என்று அவர் வியந்துள்ளார். மேலும், வெப்பமான வானிலை இருந்தாலும், டெல்லியின் வரலாற்று சிறப்பு மற்றும் மெட்ரோ சேவைகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன.
 
அவரது பதிவில் "தமிழ்நாட்டில் இருந்து 2 நாட்கள் டெல்லி சென்றேன். சென்னையுடன் ஒப்பிடும்போது டெல்லியில் ராபிடோ கட்டணம் நம்ப முடியாத அளவுக்கு மலிவாக உள்ளதாக அவர் ஆச்சரியப்பட்டார்.
 
டெல்லி மெட்ரோ  முற்றிலும் வேறுபட்ட அளவில் சுத்தமாகவும், எளிதாக பயணிக்கக்கூடியதாகவும் உள்ளது.  சிறப்பாக பராமரிக்கப்படுகிறது  என்று பாராட்டியுள்ளார். மின்சார ஆட்டோக்கள்  குறித்தும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
 
வட இந்தியக் கோவில்கள் தென்னிந்தியக் கோவில்களில் இருந்து வேறுபடுவதையும், இரவு நேரங்களில்கூட மக்கள் பஜனைகள் செய்வதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவருக்குப் பிடிக்காத விஷயங்களாக, டெல்லியின் வெப்பம், மாசுபாடு, தொடர்ச்சியான ஹாரன் சத்தம் மற்றும் குறைவான அசைவ உணவு ஓட்டல்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.
 
"வட இந்தியாவை ஆராய்ந்தது இதுவே என் முதல் முறை; இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்று அவர் தனது அனுபவத்தை நிறைவு செய்தார்.
 
Edited by Siva