1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2025 (11:50 IST)

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

மும்பை தாக்குதலையில் சதி செய்தவர் என்ற குற்றம் காட்டப்பட்ட தஹாவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
 
இதை அடுத்து, அவரை இந்தியாவுக்கு அழைத்து வர தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர் இந்தியாவுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.
 
இதை அடுத்து டெல்லி திகார் சிறை அல்லது மும்பை சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும், இரு சிறைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தஹாவூர் ராணா நாடு கடத்தப்படுவது மற்றும் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவது உள்பட அனைத்து பணிகளையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் தஹாவூர் ராணா என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
மேலும் அவர் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு அவர் உதவி செய்ததும், அந்த உதவி நிரூபிக்கப்பட்டதையும் அடுத்து, அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. தற்போது அவரை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
 
Edited by Mahendran