திங்கள், 1 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (15:16 IST)

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

டெல்லியில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் போன்ற நோய்கள் பரவுவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம், தெருநாய்கள் இல்லாத நிலையை எட்டு வாரங்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
 
நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகளில், காப்பகங்களை உருவாக்குதல், நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுதல், காப்பகங்களை சிசிடிவி மூலம் கண்காணித்தல் ஆகியவை அடங்கும். மேலும், நாய்க்கடிகள் குறித்துப் புகார் தெரிவிக்க ஒரு வாரத்திற்குள் உதவி எண்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்த முயலும் விலங்கு ஆர்வலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த உத்தரவுகள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran