தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!
தங்க நகையை அடகு வைத்து வங்கிகளில் பணம் பெறும் நடைமுறை, பலர் பிழைப்புக்கு துணையாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி புதிய ஒன்பது விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் நகைக்கடன் பெறுவது சற்று கடினமாகிறது.
புதிய விதிகளின் முக்கிய 9 அம்சங்கள்:
நகையின் மதிப்பின் 75% வரைக்கும் மட்டுமே கடன் அனுமதிக்கப்படும்.
நகையின் உரிமை பற்றிய ஆவணங்கள் கட்டாயம்.
22 கேரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுள்ள நகைகளுக்கே கடன் வழங்கப்படும்.
நகையின் தூய்மையை வங்கியே சோதித்து சான்றிதழ் தர வேண்டும்.
வெள்ளிப்பொருட்கள் அடகுக்கு அனுமதிக்கப்படும்; ஆனால் ஒரு நபர் 1 கிலோ வெள்ளி வரை மட்டுமே அடகு வைக்கலாம்.
24 கேரட் நகைகளுக்கு கூட, 22 கேரட் மதிப்பீட்டையே கடனாக கணிக்க வேண்டும்.
அடகு நகையை மீட்க வாடிக்கையாளர் முழு தொகையை செலுத்தி 7 நாள்களுக்குள் வாங்கிக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் வங்கி நாளொன்றுக்கு ₹5,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழு விபரங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.
மறு அடகாக வைக்கும் நடைமுறை முன்பே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கடுமையான கட்டுப்பாடுகள், சாதாரண மக்களுக்குச் சிரமம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva