வியாழன், 27 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஜூலை 2025 (08:01 IST)

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பிரபு சவுகானின் மகன் பிரதீக் சவுகான் மீது, திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பாலியல் பலாத்காரம் செய்ததாக  ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:
 
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கும் பிரதீக் சவுகானுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு, திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பிரதீக் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள தனியார் ஹோட்டல்களில் தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று மிரட்டியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி பலமுறை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தனது புகாரில் அவர் விரிவாக கூறியுள்ளார்.
 
இந்த சூழ்நிலையில், திருமண தேதியை இறுதி செய்வதற்காக பிரதீக் சவுகானின் வீட்டிற்கு அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். அப்போது, "உங்கள் மகளை நாங்கள் திருமணம் செய்ய மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று கூறி அவர்களை மிரட்டி திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva