1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 மே 2025 (11:33 IST)

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

tirupathi
திருப்பதி மலையிலுள்ள ஆலயப் பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, தேவஸ்தானத்திலும் உயர் நிலை பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
திருப்பதி கோயில் வளாகத்தில் விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட நிலையில், சிலர் விதிமுறைகளை மீறி டிரோன் பறக்க விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டிரோன் பயன்பாட்டைத் தடுக்க "டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு கருவி" அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
மேலும், திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஹிந்து அல்லாத ஊழியர்களை மாற்றுவது அல்லது விருப்ப ஓய்விற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இதோடு மட்டுமின்றி, திருச்சானூர், ஒண்டிமிட்டா, அமராவதி, நாகலாபுரம், கபில தீர்த்தம் மற்றும் நாராயணவனம் உள்ளிட்ட கோவில்களில் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன.
 
அதிக அளவில் பக்தர்கள் கூடும் ஆகாச கங்கா மற்றும் பாப விநாசம் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்தார்.
 
Edited by Mahendran