திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (08:21 IST)

உண்மையான ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பு.. ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர்.!

ram temple
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர்  அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு உண்மையான ராம பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

தனக்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு தெரிவித்து நிலையில் அந்த குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

 அரசியலுக்கு அப்பாற்பட்டு ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் அவருடைய அர்ப்பணிப்புக்கான வெகுமதி இந்த அழைப்பு என்றும் தெரிவித்தார்.  

உண்மையான ராமர் பக்தர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தனக்கு அழைப்பிதழ் தேவையில்லை என்றும் தான் விரும்பும் போதெல்லாம் ராமர் கோவிலுக்கு வந்து ராமரை சந்திப்பேன் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

Edited by Siva