2047ஆம் ஆண்டு வரை மோடி தான் பிரதமர் வேட்பாளர்.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வரும் 2047 ஆம் ஆண்டு வரை, அதாவது இந்தியாவின் 100-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வரை, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடி தான் இருப்பார் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மேலும் பேசுகையில், பிரதமர் மோடி பாஜகவின் தவிர்க்க முடியாத தலைவர். வரவிருக்கும் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், 2029, 2034, 2039, மற்றும் 2044 ஆகிய ஆண்டுகளிலும் அவரே கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று அவர் தெரிவித்தார்.
2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைந்த பின்னரே அவர் ஓய்வு பெறுவார்" என்று ராஜ்நாத் சிங் கூறினார். இது, மோடியின் நீண்டகால அரசியல் திட்டத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
Edited by Mahendran