வியாழன், 27 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 ஜூலை 2025 (17:00 IST)

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

Rahul Gandhi
இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று அவர் லக்னோ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்தியபோது, இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், லக்னோ நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ. 20,000 பிணைத்தொகை செலுத்தி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி பாதையாத்திரை நடந்தபோது, "சீனப் படைகள் இந்திய வீரர்களைத் தாக்குகின்றனர், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. சீன வீரர்கள் நமது வீரர்களைத் தாக்குகிறார்கள்" என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். 
 
அதற்கு இந்திய ராணுவம் தரப்பில், "சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாகவும், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததாகவும்" தெளிவுபடுத்தப்பட்டது. 
ராகுல் காந்தி தெரிவித்த இந்த கருத்தின் அடிப்படையில் தான் லக்னோ நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran