1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 மே 2025 (12:59 IST)

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட்  தேர்வின் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மின்சாரம் இல்லாததால் மாணவி ஒருவர் சரியாக தேர்வு எழுத முடியாமல் போனதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, அந்த மாணவியின் வழக்கறிஞர் பல மையங்களில் இப்படி மின்தடை ஏற்பட்டதாகவும், சில இடங்களில் மெழுகுவர்த்தி ஒளியில் மாணவர்கள் தேர்வு எழுத சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
 
இந்த விவகாரம் குறித்து நடத்திய விசாரணையில், நீதிமன்றம் நீட் முடிவுகளை இடைக்காலமாக வெளியிடக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், தேர்வுக்காக காத்திருக்கும் சுமார் 21 லட்சம் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 30ஆம் தேதி நடைபெற உள்ளதால், முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
மாணவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பதற்றம் அதிகரிக்கின்ற இந்த சூழலில், முடிவுகள் வெளியீட்டில் அடுத்த நடவடிக்கை என்ன என்பது அனைவரும் கவனித்து கொண்டிருக்கின்றனர்.

Edited by Mahendran