வியாழன், 16 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (18:53 IST)

பீகார் தேர்தல்: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு - பா.ஜ.க., JDU தலா 101 இடங்கள்!

பீகார் தேர்தல்: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு - பா.ஜ.க., JDU தலா 101 இடங்கள்!
அடுத்த மாதம் நடைபெறவுள்ள 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
 
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): 29 தொகுதிகள்.
 
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா : 6 தொகுதிகள்.
 
ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா : 6 தொகுதிகள்.
 
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிளவு இருப்பதாக வெளியான செய்திகளை ஆர்.ஜே.டி மறுத்துள்ளது. விரைவில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என்று ஆர்.ஜே.டி சட்டமன்ற உறுப்பினர் பாய் வீரேந்திரா தெரிவித்தார். 
 
Edited by Siva