செவ்வாய், 9 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (08:13 IST)

75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை: மோகன் பகவத் மறுப்பு

75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை: மோகன் பகவத் மறுப்பு
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மூத்த தலைவர்கள் ஓய்வு பெறுவது குறித்த தனது முந்தைய கருத்துக்களுக்கு முரணாக தற்போது ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார். 75 வயதை எட்டியவர்கள் ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கடந்த மாதம் மோடியை மறைமுகமாக விமர்சிப்பதாக பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கருத்தை தான் கூறவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
 
மோகன் பகவத் தனது சமீபத்திய உரையில், "75 வயது ஆனவுடன் அனைவரும் ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அனுபவம் வாய்ந்தவர்களின் பங்களிப்பு மிக அவசியம். முதுமை என்பது ஒருவரின் செயல்பாடுகளை தடுப்பதில்லை. மாறாக, அவர்களின் அனுபவம், இளைஞர்களுக்கு வழிகாட்டும். தலைவர்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெறுவது குறித்து எந்தக் கருத்தையும் நான் கூறவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.
 
தற்போது பகவத் அளித்திருக்கும் இந்த விளக்கம், அவர் தனது முந்தைய கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இந்த விவகாரம், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடையேயான உறவு குறித்து மேலும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva