செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (11:08 IST)

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

சேமிப்பு கணக்குகளில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை  குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
 
பொதுவாக, சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்ணயிக்கும் அதிகாரம் வங்கிகளுக்கு உண்டு என்றும், இதில் ரிசர்வ் வங்கி நேரடியாக கட்டுப்பாடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பை ரூ.10,000 ஆகவும், சில வங்கிகள் ரூ.2,000 ஆகவும் நிர்ணயித்துள்ளன. இது அந்தந்த வங்கிகளின் கொள்கை முடிவுகளை பொறுத்தது. மேலும், வங்கிகள் சில வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையிலிருந்து விலக்கு அளித்துள்ளன. 
 
இது வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், நிதி சேவைகளை அனைவருக்கும் கிடைக்க செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார். எனவே, இந்த முடிவுகள் அனைத்தும் வங்கிகளின் வரம்புக்குட்பட்டவை என்றும், ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்றும் மல்ஹோத்ரா விளக்கினார்.
 
 
Edited by Mahendran