வெள்ளி, 25 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (09:24 IST)

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

Pathal Village Kashmir

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக மக்கள் பலரும் ஜம்மு காஷ்மீர் சுற்றுலாவை ரத்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தற்போது கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில் மக்கள் பலரும் குளிர் பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு அதிக அளவில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறாக தேசிய அளவில் மக்கள் அதிகம் விரும்பி செல்லும் இடங்களாக காஷ்மீர், சிம்லா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சமீபமாக காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது.

 

இந்நிலையில் கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் சுற்றுலா பயணிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா சீசன் என்பதால் காஷ்மீரில் உள்ள தங்கும் விடுதிகள் முதற்கொண்டு முழுவதும் புக் ஆகியிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த தாக்குதலின் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் தங்கள் புக்கிங்கை வேகவேகமாக கேன்சல் செய்து வருகிறார்கள்.

 

காஷ்மீரில் உள்ள மக்கள் பலருக்கும் சுற்றுலா வழியாகவே வருவாய் கிடைக்கிறது. இதனால் குதிரை ஓட்டுபவர்கள், பூ விற்பவர்கள் என எளிய மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பயணத்தை ரத்து செய்யும் மக்கள் அதற்கு பதிலாக இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல அதிகளவில் புக்கிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K