டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!
பெங்களூருவில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் உள்ள ஐபிளர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ வளாகத்தின் ஒரு பகுதியை சாலைப் போக்குவரத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.
விப்ரோ குழுவினர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஒரு திட்டத்தை வகுத்து, விப்ரோ வளாகத்தின் ஒரு பகுதியின் வழியாக குறிப்பிட்ட வாகனங்களை செல்ல அனுமதித்தால் 30% வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்,” என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
விப்ரோ நிறுவனம் இதற்கு என்ன பதில் சொல்கிறது என்பதை பொறுத்தே பெங்களூரு டிராபிக் நிலை தெரிய வரும்.
Edited by Siva