செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (08:58 IST)

முதலில் விண்வெளிக்கு போனது ஆம்ஸ்ட்ராங்க் இல்ல.. அனுமார் தான்! - பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு!

anurag thakur hanuman

பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் பேசிய பாஜக எம்.பி அனுராக் தாகுர் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமார்தான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் பாஜக எம்பி அனுராக் தாகுர் மாணவர்களிடையே உரையாடினார். அப்போது அவர் ‘விண்வெளிக்கு முதலில் சென்றது யார் தெரியுமா?’ என்று கேட்க, மாணவர்கள் அனைவரும் ‘ஆம்ஸ்ட்ராங்’ என கூறியுள்ளனர்.

 

அதற்கு அவர் “முதன்முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன் தான். ஆம்ஸ்ட்ராங் இல்லை. சூரியனை பழம் என நினைத்து அதை பறிப்பதற்காக அனுமன் விண்வெளிக்கே சென்றார். நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரத்தை பாட புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

 

அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புராண இதிகாசக் கதைகளை தற்கால அறிவியல் சாதனைகளுடன் ஒப்பிட்டு பேசி விண்வெளி தினத்திற்கான நோக்கத்தையே அனுராக் தாகுர் சிறுமைப்படுத்திவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K