விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்
இந்திய ரயில்வே, விமான நிலையங்களை போன்றே ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகளின் எடை மற்றும் அளவை கட்டுப்படுத்த புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது.இதன் மூலம், ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு, விமான நிலையங்களை போன்ற ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதிகளின்படி, முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் உடமைகளை மின்னணு எடை இயந்திரங்களில் எடைபோட வேண்டியிருக்கும். அனுமதிக்கப்பட்ட எடை மற்றும் அளவை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ஒவ்வொரு பயண வகுப்பிற்கும் இலவசமாக எடுத்து செல்லக்கூடிய உடமைகளின் எடை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறி எடுத்துச்செல்ல விரும்பினால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
உடமைகளின் எடை மட்டுமின்றி, அதன் அளவிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரங்குகள் மற்றும் சூட்கேஸ்கள் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டக்கூடாது. இந்த அளவை மீறும் உடமைகள், எடை குறைவாக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படலாம்
Edited by Mahendran