நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!
பெர்த்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமான பணியாளரை பாலியல் தொந்தரவு செய்த 20 வயது இந்திய இளைஞருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ரஜத் என்ற பணிப்பெண்ணை அந்த இந்தியர் விமானத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பணியாளர் புகார் அளித்ததன் பின்னர், சாங்கி விமான நிலையத்தில் இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொந்தரவுக்கு எதிராக, இந்தியருக்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படுமென துணை வழக்குரைஞர் யூஜின் லாவ் தெரிவித்தார்.
மேலும், பணியாளரை இந்த சம்பவம் மன உளைச்சல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், இந்தியரின் இந்த செயலால் அவள் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, அந்நாட்டு நீதிமன்றம் இந்தியருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Edited by Mahendran