1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 மே 2025 (07:40 IST)

மே 7ஆம் தேதி.. நாள் குறித்த மத்திய உள்துறை அமைச்சகம்.. அனைத்து மாநிலங்களுக்கும் முக்கிய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதன் முக்கிய பகுதியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் அழிக்கப்படும் என்றும், ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், போர் பயிற்சிகள் நடந்து வருவதாகவும், ‘பிளாக் அவுட்’ எனப்படும் பயிற்சி பாகிஸ்தான் எல்லைகளில் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக விமான தாக்குதலைக்கான அலாரம் சோதிக்கப்படும் என்றும், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பலருக்கும் எதிரான  தாக்குதலை முறியடிப்பது குறித்த பயிற்சி  அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிளாக் அவுட்’ எனப்படும் அதாவது மின் நிலைகள் அனைத்தும் நிறுத்தப்படும் நடவடிக்கைகள் நடைமுறையில் செயல்படுத்தப்படும் என்றும், இந்த பயிற்சிகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று அல்லது நாளை பிரதமரை சந்திப்பார் என்றும், அப்போது போருக்கான  தேதி குறிக்கப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva