செவ்வாய், 8 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 ஜூலை 2025 (15:48 IST)

டிரம்ப் வரி விதிக்கப்போகும் 15 நாடுகள் பட்டியல்.. இந்தியா பெயர் இருக்கின்றதா?

Modi Trump
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதிக்கப்போவதாக 15 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது ஆறுதலான செய்தியாக உள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர், பரஸ்பர வரி மாற்றப்பட்ட வட்டி விகிதங்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த அவகாச நாட்களில் இந்தியா உட்பட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
 
ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாத 15 நாடுகளுக்கு நாளை முதல் வரி விதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன் அந்தந்த நாடுகளுக்கான வரி சதவீதமும் அறிவித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை. காரணம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
 
ஆனால், அதே நேரத்தில் பால் மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரி விதிப்புகளை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்றும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா பயப்படாது என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
வரி விதிக்கப்பட உள்ள 15 நாடுகளின் பட்டியல் இதோ:  
 
1. தென் கொரியா - 25 சதவிகிதம்;
 
2. ஜப்பான் - 25 சதவிகிதம்;
 
3. மியான்மர் - 40 சதவிகிதம்;
 
4. லாவோஸ் - 40 சதவிகிதம்;
 
5. தென் ஆப்பிரிக்கா - 30 சதவிகிதம்;
 
6. கஜகஸ்தான் - 25 சதவிகிதம்;
 
7. மலேசியா - 25 சதவிகிதம்;
 
8. துனிசியா - 25 சதவிகிதம்;
 
9. போஸ்னியா - 30 சதவிகிதம்;
 
10. இந்தோனேசியா - 32 சதவிகிதம்;
 
11. வங்காளதேசம் - 35 சதவிகிதம்;
 
12. செர்பியா - 35 சதவிகிதம்;
 
13. கம்போடியா - 36 சதவிகிதம்;
 
14. தாய்லாந்து - 36 சதவிகிதம்;
 
15. ஹெர்சகோவினா - 30 சதவிகிதம்.
 
 
Edited by Mahendran