ஆபாச படம் பார்த்து துன்புறுத்திய கணவர்.. போலீசில் புகார் அளித்த மனைவி..!
உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் உள்ள ஒரு பெண், தனது கணவர் தன்னை பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி போல மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக, அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக அவர் புகார் அளித்துள்ளார்.
சானு என்ற சான்வி, தனது கணவர் ஷிவம் உஜ்வல் ஒரு அரசு உடற்கல்வி ஆசிரியர் என்றும், அவர் தன்னை தினமும் மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். சோர்வு அல்லது உடல்நலக் குறைவு காரணமாக உடற்பயிற்சி செய்யத் தவறினால், அவர் பல நாட்களுக்கு உணவை மறுத்ததாக சானு குற்றம் சாட்டியுள்ளார்.
தன் கணவர், நோரா ஃபதேஹி போன்ற ஒருவரைத் திருமணம் செய்திருக்கலாம் என்றும், தன்னை மணந்தது தன் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் தொடர்ந்து கூறி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். தனது கணவர் மற்றும் மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, கருச்சிதைவு, மிரட்டல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.
தனது கணவர், மற்ற பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்ததாகவும், அதனைத் தான் எதிர்த்தபோது, அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அந்தப் பெண்ணின் புகார் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Edited by Siva