வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2025 (08:09 IST)

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்: இன்று முதல் அமல்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கடும் கண்டனம்..!

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்: இன்று முதல் அமல்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கடும் கண்டனம்..!
மக்களுக்கு விலைவாசி குறைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசி ஜி.எஸ்.டி. செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சீர்திருத்தத்தின்படி, 375 பொருட்களின் விலை கணிசமாக குறையும்.
 
முன்னதாக, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இது 5%, 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. வரி குறைப்பின் முழுப்பயனும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
மோடி அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே  கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.55 லட்சம் கோடி வசூலித்துவிட்டு, தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு கிடைக்கும் என்று கூறுவது, பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டு சிறிய பேண்ட்-எய்ட் போடுவது போன்றது. 
 
பருப்பு, தானியங்கள், பென்சில், புத்தகம், சிகிச்சைச் சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக ஜி.எஸ்.டி. விதித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார். 
 
கார்கேவின் இந்த விமர்சனம், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva