திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:40 IST)

மாநிலங்களுக்கு நிதி பகிர்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் மத்திய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படு வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு ரூ.72000 கொடுக்கிறது. தமிழ் நாடு அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது.

மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் அவர்களின்  நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது.

பெற்ற வரியைவிட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என 10 ஆண்டுகளாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் விலைவாசி உயர்வு, பணமதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் அவர்கள்( மத்திய அரசு) கருத்தில் கொள்ளவில்லை  என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்திற்கு பெற்ற வரியைவிட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.