2029ல் ராகுல் காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார்.. துணை முதல்வர் நம்பிக்கை..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே. சிவகுமார், 2029-ல் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"2029-ல் ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இல்லை" என்று கூறி, பாஜக-வை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
மாநில சட்டமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். கீதத்தை அவர் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து பேசிய சிவகுமார், "பாஜக-வின் காலை வாரிவிட முயற்சி செய்தேன். நான் ஒரு காங்கிரஸ்காரனாக பிறந்தேன், காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். பாஜக-வுக்கு எந்த கொள்கையும் இல்லை. காந்தி குடும்பத்தின் மீதான எனது விசுவாசம் தனிப்பட்டது. காந்தி குடும்பம்தான் கட்சியையும் நாட்டையும் ஒற்றுமையாக வைத்துள்ளது.
Edited by Siva